பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

2019-இல் கனடாவில் நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அவரது தலைமையிலான லிபரல் கட்சி, மான்ட்ரியல் மாகாணத்தில் பப்பினியா தொகுதி வேட்பாளராக அவரை அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில் தான் அவர் 2008, 2011, 2015-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் சூழலிலும், நேர்மறையான சிந்தனையுடன் மக்களை ஒருங்கிணைத்து நாட்டை வளப்படுத்த உறுதிபூண்டுள்ளதால், பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விரும்புவதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்