சிறிலங்கா கிரிக்கட்டின் 20க்கு 20 லீக் போட்டித்தொடர் நேற்று ஆரம்பம்

சிறிலங்கா கிரிக்கட்டின் 20க்கு20 லீக் போட்டித் தொடர் நேற்று ஆரம்பமானது.

அதன்படி, இன்றைய தினமும் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு அணிக்கும் கண்டி அணிக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரபமாகவுள்ளது.

அதுபோல், காலி அணிக்கும் தம்புள்ள அணிக்கும் இடையிலான போட்டி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே நேற்று இடம்பெற்ற போட்டிகளில் கொழும்பு அணி காலி அணியை 90 ஓட்டங்களால் வெற்றிக்கொண்ட நிலையில், தம்புள்ளை அணி 18 ஓட்டங்களால் கண்டி அணியை தோற்கடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்