சிறப்பாக இடம்பெற்ற வீதியோட்டநிகழ்வு

கிளிநொச்சி கனகபுரம் படித்த வாலிபர் மேட்டுநிலக் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டப்பட்டு 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இக்குடியேற்றத்திட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் சமூக சேவையாளருமான அமரர் சி.கனகேந்திரம் அவர்கள் ஞாபகார்த்தமாக ஆண் பெண் இருபாலருக்கும் இடையில் வீதியோட்ட நிகழ்வு இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வீதியோட்ட நிகழ்வினை கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆரம்பித்து வைத்தார். குறித்த வீதியோட்ட நிகழ்வானது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பதாக ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் விளையாட்டு கழக மைதானத்தில் நிறைவுற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்