முன்றாவது டெஸ்ட்டில் வெற்றியை சுவீகரித்தது இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நொட்டிகாமில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதனை தொடர்ந்து துடுப்பாடி இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி, அணித் தலைவர் விராட் கோலியின் 103 என்ற ஓட்டங்களின் துணையுடன் 7 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
அதனை தொடர்ந்து தமது 521 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய இறுதி நாள் ஆட்டத்தின் போது, சகல விக்கட்டுக்களையும் இழந்து 317 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜோஸ் பட்லர் 106 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இந்திய அணிசார்பில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக, இந்திய அணி தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை