அன்ரோயிட் சாதன பாவனையாளரா நீங்கள்? உங்களுக்கு எதிர்காலத்தில் காத்திருக்கிறது பாரிய ஆபத்து

பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதனால் இணையத்தை அதிக அளவில் நாம் பயன்படுத்திவருகின்றோம்.

இதற்காக எமது தனிப்பட்ட தகவல்களையும் இணையத்தளங்களில் பகிர்ந்துவருகின்றோம்.

அதிலும் பேஸ்புக் மற்றும் கூகுள் சேவைகளில் தனிப்பட்ட தகவல்கள் அதிகமாக பகிரப்படுகின்றது.

சமீப காலத்தில் எமது தனிப்பட்ட தகவல்களை இவ்வாறான இணையத்தளங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துகின்றமை வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

ஆனால் நாம் அனைவரும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக தரவுகளை கூகுளின் அன்ரோயிட் சாதனங்கள் திரட்டி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

பயனர்கள் பயன்படுத்தும் கூகுளின் பல்வேறு சேவைகளின் ஊடாகவே இந்த தகவல்கள் திரட்டப்படுகின்றது.

அன்ரோயிட். சாதனங்கள் தவிர கூகுள் குரோம் இணைய உலாவியின் ஊடாகவும் இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக கூகுள் குரோம் உலாவி செயற்பட்டுக்கொண்டிருக்கையில் பயனர்களின் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களை பின்னணியில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் ஹேக்கர்களின் கைகளிற்கு செல்லும் வாய்ப்பு காணப்படுவதுடன் எதிர்காலத்தில் குறித்த நிறுவனங்களே பயனர்களுக்கு எதிராக தகவல்களை பயன்படுத்தும் சாத்தியங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்