ரொறொன்ரோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியானது!

ரொறொன்ரோ அடலெய்ட் தெரு கொண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த அடலெய்ட் தெரு நாடாளுமன்ற வீதிக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

இதில் தலையில் துப்பியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்திருந்தார். இவர் 22 வயதுடைய ஜெஸ்ஸி கிரஹாம் ரிக்டர் என்ற இளைஞரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் 20 வயதுடைய நபரை தேடி வருகின்றனர்.

மேலும், 5 அடி10 அங்குலம் உயரம், கருப்பு நிறம் மற்றும் அவர் ஒரு கருப்பு ஜக்கெட் மற்றும் நீள கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொது மக்களை தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்