3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்: பெண்ணொருவர் கைது!

3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 22 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வோர்செஸ்டர் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த யூலை 21 ஆம் திகதி குறித்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறித்த சிறுவனின் கை மற்றும் முகம் பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தான்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், குறித்த சிறுவனின் தந்தை உட்பட 6 பேரை கைது செய்திருந்தனர்.

அவர்களை வோர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஓகஸ்ட் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது பிர்மிங்ஹம் பகுதியை சேர்ந்த மார்டினா படியோவா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கிட்டர்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்