யாழ். சென் ஜோன்ஸ் அணி சம்பியன்

யாழ்ப்­பா­ணப் பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி சம்­பி­ய­னா­னது.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் கடந்த சனிக்­கி­ழமை இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது.இதில், யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற யாழப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தாடி 70 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 143 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது. சஞ்­ச­யன் 52 ஓட்­டங்­க­ளை­யும், சாரங்­கன் 43 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் விது­சன் 3 இலக்­கு­க­ளை­யும், சுபி­சன், அபி­சேக், ஆகி­யோர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி 36.1 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் நிறை­வில் 5 இலக்­கு­களை இழந்து 150 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் நாள் முடி­வுக்கு வந்­தது.

முதல் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­ற­தைத் தொடர்ந்து சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. அதி­க­பட்­ச­மாக கனிஸ்­ரன் 94 ஓட்­டங்­க­ளை­யும், அபி­சேக் 23 ஓட்­டங்­க­ளை­யும், பிர­ண­வன் ஆட்­டம் இழக்­கா­மல் 20 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்