பிரான்சில் குழு மோதலுக்குத் தயாரான 14 ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் கைது!

பிரான்சின் பாரிஸ் நகரில் வாள்கள் , கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள் நேற்றுமுன்தினம் மாலை பிரெஞ்சு காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிஸ் நகரின் 19 வட்டாரம், போர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள், கத்திகள் ஆகியவற்றுடன் நேற்றுமுன்தினம் பிற்பகல் வேளை நின்றனர். இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்கள் அனைவரையும் மாலை 15.45 மணியளவில் கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குழு மோதல்களில் ஈடுபட தயாராகும் வகையில் இந்த தமிழ் இளைஞர்கள் குழு இங்கு நின்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்