எல்லை நிர்ணய அறிக்கை குறித்து மீளாய்வு செய்ய குழு

மாகாண சபை தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை குறித்து மீளாய்வு செய்யும் வகையில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்து பேர் கொண்ட மீளாய்வு குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்