வாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்

உணவுகளின் கடவுள் என்று கூறும் பெருங்காயம் கசப்பு சுவை உடையதாகவும், கடுமையான வாசனை உடையதாகவும் இருக்கும்.

பெருங்காயம் உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும்.

பெருங்காயத்தில் இருக்கும் பாகு பொருட்கள், கிருமி எதிர்ப்பு, வலி குறைப்பு, வாய்வு எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மற்றும் நோய்க்கிருமி எதிர்ப்பு போன்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் இது வாய்வு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவுகிறது.
பெருங்காயத்தின் நன்மைகள்

சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் சூதகவாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.

பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.
பயன்படுத்தும் முறை

வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து பருகினால் வயிறு தொடர்பான பிரச்சைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

இஞ்சி தூள், கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.

2கிராம் பெருங்காயத்தை 20 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு துளி அளவு காதில் விட காதுவலி குணமாகும்.

தேள் கொட்டு சரியாக பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து கொட்டிய இடத்தில் பூச வேண்டும்.

குடலின் இயக்கத்தை அதிகமாக்க, நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயம் வயிற்றின் மீது தடவப்படுகின்றது.

ஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்து அதில் சில துளி கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தொப்புளில் தடவி சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.

அருகம்புல் சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் பூசிவர வெயிலால் ஏற்படும் கருமை, அரிப்பு, தடிப்பு சரியாகும்.

குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.

எச்சரிக்கை:

பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாக்கும்.

எனவே உள் மருந்தாக பெருங்காயத்தை உபயோகிக்கும்போது பொரித்து உபயோகிப்பதே நல்லது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்