இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவை பந்தால் அடிப்பேன்! இந்திய வீரர் மிரட்டல்

இங்கிலாந்து அணி வீரர் பேர்ஸ்டோவை பந்தால் அடித்து காயப்படுத்துவேன் என இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால், தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

அதே போல், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிற்கு கைவிரலில் காயம் ஏற்பட்டு குணமாகியுள்ளார்.

ஆனால், விக்கெட் கீப்பராக செயல்படாவிடிலும் துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் முகமது ஷமி தனது பந்துவீச்சால் பேர்ஸ்டோவை காயப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ‘பேர்ஸ்டோவ் அசரும் நேரத்தில் அவரை பந்தால் காயப்படுத்துவேன். நான் மட்டுமல்ல, எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளருமே துடுப்பாட்ட வீரர்கள் அசரும் நேரத்தில் அதைத்தான் செய்வார்கள்.

அதனால் நான் அதற்கு கண்டிப்பாக முயற்சி செய்வேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு நம் அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்துள்ளனர். இங்கிலாந்து அல்ல, எந்த அணியும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக இல்லை.

நாங்கள் எங்கள் பந்துவீச்சு தந்திரங்களை, புதிதாக வரும் ஜூனியர் பந்துவீச்சாளர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்