கவலை வெளியிட்டுள்ள விராட் கோலி

வர்த்தக ரீதியான எதிர்பார்ப்புகள் காரணமாக, கிரிக்கட் தமது தரத்தை இழந்து வருவதாக, இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோலி கவலை வெளியிட்டுள்ளார்.

20க்கு20 கிரிக்கட் போட்டிகளைப் போன்ற, 100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதற்கான யோசனையை இங்கிலாந்து கிரிக்கட் சபை முன்வைத்துள்ளது.

இது தொடர்பிலும் கோலி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இவ்வாறு 100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டித் தொடர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டால், தாம் அதில் விளையாடப் போவதில்லை என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல் மற்றும் பிக்பேஸ் லீக் போன்றவை 20க்கு20 கிரிக்கட் போட்டிகளைக் கொண்டாக இருக்கின்றன.

தற்போதுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு20 என்ற கிரிக்கட் முறைமைகளுக்கு மேலாக, இன்னுமொரு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால் தாம் அதில் பங்குக் கொள்ள போவதில்லை என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்