ஒரே நேரத்தில் இறந்த நூற்றுக்கணக்கான மான்கள்: அடுத்து காத்திருக்கும் பாரிய பிரச்சினை

ஏறத்தாழ 2 வருடங்களுக்கு முன் நோர்வேயின் தென்கிழக்குப் பகுதியில் 323 மான்கள் மின்னல் தாக்கத்திற்குட்பட்டு இறந்து போயிருந்தன.

அவை தொலைதூர மலைப்பகுதியொன்றில் ஒன்றன் மீது ஒன்றாக குவியலாக இறந்து காணப்பட்டிருந்தன.

இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகள் தெருவிக்கையில் தாம் இதுபோன்ற சம்பவம் ஒன்றை இதற்கு முன்னர் அறிந்ததேயில்லை என்றிருந்தனர்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து நோய்கள் தொற்றும் ஏற்படும் சாத்தியப்பாடு உள்ளதா எனவும், அப்பகுதியின் சீர்கேடு பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான ஆய்வு ஒன்று தற்போது Biology Letters Study பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது இறந்த மான்களின் உடல்கள் அப்பகுதியில் தாவரங்களின் பெருக்கத்திற்கு காரணமாகலாம் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

அங்கு காணப்படும் உடல்கள் மீது இரை கொள்ளும் அழுகல்வளரிகள் வெளியேற்றும் கழிவுகளிலுள்ள வித்துக்கள் இத் தாவரக் குடித்தொகையின் தோற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்