பிரபல வீரர் ஒருவருக்கு நீண்ட கால கிரிக்கட் தடை…?

பங்களாதேஸின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் நீண்ட கிரிக்கட் தடையை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் அவர் பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் ஒழுக்காற்று குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகவுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கடந்த மாதம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் தோல்விக் கண்டதன் பின்னர், இரசிகர் ஒருவரை இழிவு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவருக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்