நஃப்டா பேச்சுவார்த்தைக்கான கனடாவின் ஏற்பாடு இன்றுடன் நிறைவு!

நஃப்டா வர்த்தக ஒப்பந்தத்தினை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையில் இணைந்து கொள்ளும் முகமாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதியினைச் சந்தித்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலன்ட்டின் இரவு பகலாகத் தொடரும் கலந்துரையாடல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவுக்கு வரவுள்ளது.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை முன்னெடுக்கும் அமெரிக்கா-மெக்சிகோ நாடுகள் மாத்திரம் ஒன்று சேர்ந்து இருதரப்பு வர்த்தகத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்த நிலையில், நஃப்டாவில் அங்கம் வகிக்கும் மூன்றாம் நாடான கனடாவினை இணைக்கும் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவே கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலன்ட் வொஷிங்டன் சென்று குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தமே அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் பாலமாக அமையுமென நம்புவதாக ஃபிரீலன்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

குறித்த இருதரப்பு ஒப்பந்தமானது வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டித்தரக் கூடியதென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்