மாங்குளத்தில் விபத்து: 9 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) வேன் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வேன் சாரதியின் கவனயீனம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்