பிரித்தானியா இலங்கைக்கான ஆயுத விற்பனை நிறுத்த கோரும் விவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானிய எம்.பி

பிரிட்டன் அரசால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியு தமிழ் தகவல் நடுவத்தினர் தொடர்ச்சியாக பிரித்தானிய  எம் பிக்களை சந்தித்து வருகின்றனர்.
 
 அந்த வகையில் கடந்த 31.08.2018 அன்று  குறித்த அமைப்பினுடைய செயற்பாட்டாளர் அம்பிகைபாகன் அகீபனுக்கு இல்பேர்ட்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting MP அவர்கள் தாம் குறித்த (Motion) EDMல் கையெழுத்திட்டதாக மின்னஞ்சல்  மூலம் தெரிவித்துள்ளார் மேலும் இலங்கையின் வடபகுதியில் அதிகரிக்கப்பட்ட இராணுவ பிரசன்னங்களும் போலீஸ் மற்றும் புலனாய்வு  குழுக்களும் செயற்படுவது தொடர்பான வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 பிரிட்டனின் இலங்கைக்கான ஆயுத விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தகவல் நடுவத்தினர் தொடர்ந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்