ஓய்வை அறிவித்த இந்திய அணியின் பிரபல வீரர்..!

இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் நேற்று தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு செப்டம்பர் 4ம் திகதி அவர் முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

சரியான 13 வருடங்களின் பின்னர், தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.பி.சிங், 40 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் 58 ஒருநாள் போட்டிகளில் 69 விக்கட்டுகளை வீழ்த்தி இருப்பதுடன், 10  20க்கு20 போட்டிகளில் 15 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் மொத்தமாக 80 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 90 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்