பாரிசில் சிறப்புற நடைபெற்ற கன்பொல்லை மக்கள் ஒன்றிய பதின் நான்காவது ஆண்டு விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புற நகரப்பகுதியான சார்சேல் என்னும் இடத்தில் கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்திய பதின் நான்காவது ஆண்டு விழா ஒன்றியத்ததலைவர் மா.பாஸ்கரன் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் ஆரம்பத்தில் விழாவில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் கலைஞர் பரா அவர்களின் குழுவினரின் பறை முழங்க மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர் .குத்து விளகேற்றி அக வணக்கத்துடன் விழா ஆரம்பித்தபோது கடந்தவாரம் கரவெட்டியில் மறைந்த கலைஞரும் கம்யூனிச வாதியுமான அமரர். ஆ.தங்கராசாவின் உருவப்படத்துக்கு மண்டபத்தில் கூடியிருந்த கலைஞர்கள் மற்றும் பிரமுகர்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது .

விழாவில் இசைக்கச்சேரி பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மேலைத்தேய நடனங்கள் என சிறப்பாக நடைபெற்றது

விழாவில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் துணைத்தலைவர் சரவணையூர் விசு செல்வராசா அவர்கள் மறைந்த தோழர் ஆ.தங்கராசா அவர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபின் சிறப்புரையாற்றியபோது அண்மையில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தினர் கன்பொல்லை மக்கள் ஒன்றியத்தின் கௌரவிப்பு விழாவுக்கு கன்பொல்லை சென்றபோது மறைந்த தோழர் ஆ.தங்கராசா அவர்களின் பெயர் அந்த நிகழ்வில் கௌரவம் பெறுவோர் பட்டியலில் இருந்ததாகவும் அவர் சுகவீனம் காரணமாக அந்த கௌரவிப்பு விழாவுக்கு வரவில்லை என்று தன்னிடம் அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் கூறியதாக கூறி அவர் மேடைகளில் பாடிய பிரபலமான பாடலான மாவிட்டபுரத்திலோர் மந்தி என்ற பாடலை ஞாபகப்படுத்தியதுடன் கன்பொல்லையில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார் .

கன்பொல்லை மக்கள் ஒன்றியம், கன்பொல்லையில் மேற்கொண்டுவரும் மனிதாபிமான உதவிகளையும் மாணவர்கள் முன்னேற்றத்தில் கன்பொல்லை மக்கள் ஒன்றியம் ஆற்றுகின்ற பணி அளப்பரியது என்று குறிப்பிட்டதுடன்.புலம்பெயர்ந்து வந்த பின் நாம் நமது தொப்புள் கொடி உறவுகளை மறந்து விடாமல்.இப்படியான கிராம ஒன்றியங்கள் மூலம் செய்கின்ற உதவிகள் நமது கிராமங்களில் பின் தங்கிய மாணவர்கள், வறியவர்கள், ஆதரவற்றோர் ஆகியவர்களுக்கு உதவுவதன் மூலம் நமது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றதுடன் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து உதவிபுரிய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் .

இந்த விழாவில் திருமதி .ஜெயா பொன்மணி அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமாரு மற்றும் ம.டக்கிளஸ் உட்பட பலர் உரையாற்றினர்.

இந்த விழாவினை கன்பொல்லை மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த ச.நவரத்தினம்செந்தில்வேல்,புஸ்பாகரன், ஒன்றிய தலைவர் மா.பாஸ்கரன், ஒன்றிய .செயலாளர் இ.சாந்தன் , பொருளாளர் ஜெமில்ராஜ் மற்றும் குலசேகரம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்