சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா பாராளுமன்றத்தில் முக்கிய கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா west minister இல் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் committee room 12 இல் நேற்று (05/09/18) மாலை 6 மணிதொடக்கம் 9 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தொடர்ந்து இலங்கை அரசால் நடத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்படல் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமுகத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடுகடந்த அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் உள்ளேயே பலர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் கண்ணால் கண்ட சாட்சியங்களையும் இலங்கை அரசாங்கத்தால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் கலந்து கொண்டு தமது சாட்சியத்தையும் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்