யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் மரியாதை நிமித்தம் மார்க்கம் நகர மேயரை சந்தித்தார்

யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் அவர்கள் மரியாதை நிமித்தம் மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti அவர்களைச் சந்தித்தார். மேயர் Frank Scarpitti மார்க்கம் நகர் பற்றிய ஒரு நூலை அன்பளிப்புச் செய்தார்.

யாழ்ப்பாண மேயர் ஆனோல்ட் போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாண நகரை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள பல சவால்கள் பற்றியும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டியெழுப்பு முயற்சிகள் பற்றியும் மேயர் Frank Scarpitti அவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் கழிவு மேலாண்மை, நகர திட்டமிடல் மற்றும் பராமரிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவரது உதவியை வேண்டினார்.

மேயர் Frank Scaopitti அவர்கள் தமிழ் சமூகத்தை அங்கீகரிப்பதில் மார்க்கம் நகர் எடுத்த முயற்சிகள் பற்றியும் அதில் கிடைத்த வெற்றிபற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார். மார்க்கம் நகரத்தின் சிறந்த நடைமுறைகளை யாழ்ப்பாண நகரத்தோடு பகிர அவர் முன்வந்தார்.

மார்க்கம் மேயர் அவர்களுடனான சந்திப்பு முடிந்த பின்னர் மார்க்கம் நகர சபையின் கூட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்