இனிமேல் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் அடிக்க முடியாது! புதிய உத்தரவு!

இனிமேல் தலையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி சென்றால் பெட்ரோல் அடிக்க முடியாது.

வங்காளதேசத்தில் அண்மையில் பேருந்து மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, வீதி வசதியை மேம்படுத்தக்கோரி, தலைநகர் டாக்கா மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டமை அனைவரும் அறிந்ததே.

இதனை அடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தலையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பைக்கில் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். பைக் ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்