தந்தை திட்டியதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் நண்பர்கள்..!

இந்தியாவில் தந்தை மோசமாக திட்டியதால், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஹைதரபாத்தில் உள்ள Keesara Mandal பகுதியில் இருக்கும் Chirala கிராமத்தைச் சேர்ந்தவர் Nityanand.

இவருக்கு 24 வயதில் Sony என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று நித்யானந்த் தன் மகள் சோனிவுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் மகளை மிகவும் மோசமாக திட்டியுள்ளார். இதனால் மன வேதனையடைந்த அவர் அங்கிருக்கும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இவர், தன்னுடைய நண்பர்களுக்கு போனில் நான் சாகப் போகிறேன் என்று குறுந்ததகவல் அனுப்பியுள்ளார்.

சோனி அங்கிருக்கும் Geetanjali என்ற கல்லூரியில் B. Pharmacy இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் அவர் தன்னுடைய பையை வகுப்பறையிலே வைத்து வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தந்தை அப்படி என்ன சொன்னார்? ஏன் இந்த பெண் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்