படுதோல்வியில் இருந்து தப்புமா இந்தியா?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாக உள்ளது.

இலங்கை நேரப்படி லண்டனில் பிற்பகல் 3.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இங்கிலாந்து அணி, 3க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தொடரை இழந்தமையினால் இந்திய அணி மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில், இந்திய அணி களமிறங்க உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்