யாழ்ப்பாணம் .இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன்

(வ. ராஜ்குமார்)

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 10 மாவட்டங்களை சேர்ந்த 10 பாடசாலை அணிகள் 20 வயதுக்குட்பட்ட வர்களுக்காண லைகா மொபைல் சொக்கர் கிங்ஸ் வோர் வெற்றிக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 07ம், 08ம், 09ம் திகதிகளில் திருகோணமலை ஏகாம்பரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இறுதிப் போட்டி 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் புனித ஹென்றியாசர் கல்லூரியும், புத்தளம் ஸாஹிரா கல்லூரியும் எதிர் கொண்டன 3 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் யாழ்ப்பாணம் புனித ஹென்றியாசர் கல்லூரி வெற்றி கொண்டு சம்பியன் ஆனது.

இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து சிறப்பித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்