இராணுவம் படுகொலை செய்த மக்களை நினைவு கூர்ந்து இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்று

( மன்னார் நிருபர்)

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கடண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 35 இக்கும் அதிகமான அப்பாவி பொது மக்களை நினைவு கூர்ந்து வட்டக்கண்டல் சுடரொலி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) மாலை வட்டக்கண்டல் மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஆண்டாங்குளம் சென்.தோமஸ் அணியினருக்கும், முத்தரிப்புத்துறை சென்.ஜோசப் அணியினருக்கும் இடையில் போட்டி இடம்பெற்றது.

இதன்போது 2-0 என்ற அடிப்படையில் ஆண்டாங்குளம் சென்.தோமஸ் விளையாட்டு அணியினர் வெற்றி பெற்று வெற்றிக்கேடயத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்