கடல்வாழ் உயிரினங்களுடன் சீனப்பிரஜை கைது

அனுமதியற்ற முறையில் கடல் உயிரினங்களை வைத்திருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடல் குதிரைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 33 கிலோவும் 330 கிராம் நிறையுடைய உலர்ந்த கடலட்டைகளும், 05 கிலோவும் 500 கிராம் நிறையுடைய கடல் குதிரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

27 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்