களமிறங்கார் நாமல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் உங்கள் குடும்ப அங்கத்தவரா அல்லது வெளிநபரா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”எனது மகன் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார். ஏனெனில், ஜனாதிபதி வேட்பாளருக்கான வயதெல்லை தற்போது 35ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே 2019ஆம் ஆண்டு தேர்தலில் எனது சகோதரர் ஒருவரே நிச்சியமாக வேட்பாளராக களமிறங்குவார். ஆனால், அது யார் என்பதை கட்சியும், கூட்டணியுமே தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்