முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளிசுறா

இலங்கையில் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சுறா குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய உயிரினமான வெள்ளைப் புள்ளி சுறா மீன் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் கரையொதுங்கியது .

முல்லைத்தீவு மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தின் ஆய்வாளர் மொஹான் குமார, அளம்பில் கடற்படை அதிகாரிகளுக்கு கரையொதுங்கிய சுறா மீன் குறித்து அறிவித்துள்ளார்.இதனையடுத்து கடற்படையினர் கடும் சிரமப்பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலைவிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

சுறா குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய உயிரினமான வெள்ளை புள்ளி சுறா மீன் சுமார் 900 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் 9 மீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும்.இந்த வகை சுறா மீன்கள் 70 முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை. மேலும் இந்த மீன் இனம் உலகில் அருகி வரும் மீன் இனம் என அறிவிக்கப்பட்டுள்ளளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்