நேற்று யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் வாகன கடத்தல் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

யாழில் கொடிகாமம் பொலிஸாரின் வாகனமும், ஆயுதங்களும் நேற்று கடத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே வாகனம், கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியிருந்த நிலையிலே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை வாகனத்தில் இருந்து ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்றதிலிருந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்