தேசிய மட்ட கபடிப்போட்டி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மகுடம் சூடியது

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் 17வயது ஆண்கள் பிரிவில் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி அணியினர் 36:28 என்ற புள்ளி அடிப்படையில் தமுத்துகம வித்தியாலய அணியை தோற்கடித்து வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர்.

இதே அணி 2016ம் ஆண்டு நடந்த கபடி போட்டியில் 3ம் இடத்தை பெற்றமை குறிப்பிட்ட தக்கது. இந்த அணியின் தலைவர் செல்வன் அ.ஸ்ரெலின் ஜெனிசாந் இலங்கை தேசிய கபடி அணிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்