நடுவீதியில் மோசமாக அசிங்கப்பட்ட மஹிந்த!

கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் நபர் ஒருவர் உயிரிழந்த விடயம் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விஷம் கலந்த பால் வழங்கியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபானம் அருந்தியமையினாலேயே சுகயீனமடைந்ததாக அரசாங்க தரப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த பால் பக்கட்டினை அருந்தியமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நோய்வாய்ப்பட்டிருந்தார். நேற்று நீதிமன்றத்திற்கு வந்து சென்றார். எனினும் அவருக்கும் இன்னமும் உடல் நிலை சரியாகவில்லை என மஹிந்த குறிப்பிட்டார்.

எனினும் அவர் அவ்வாறு கூறும் போதும் டலஸ் அழகப்பெரு மஹிந்தவுக்கு அருகில் சிரித்து கொண்டு நின்றுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளியினால் நகைப்புக்குரியவராக மஹிந்த மாறி விட்டார் என கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்