புகைப்பொருள்,மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடைசெய்யுமாறு கையெழுத்துவேட்டை

வடக்குமாகாணத்தில் அதிகளவான சனத்தொகையை கொண்டுள்ள யாழ்.மாவட்டத்தில் புகைப்பொருள் மற்றும் மதுசாரப் பாவனையானது பாரிய பிரச்சினைகளைஏற்படுத்தியுள்ளமை யாவரும் அறிந்தவிடயமே,

அதன் தாக்கம் மேலும் அதிகரித்து தற்போது கஞ்சா,ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களையும் பாவனைசெய்யும் அளவிற்குஎமது இளைஞர் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் இவ்வாறான போதைப்பொருள் பாவனையாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கஞ்சா,ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் ஆரம்பத்தில் சாராயம்,பியர் மற்றும் புகையிலைசார் உற்பத்தி போன்றபொருட்களிலேயே பாவனையை ஆரம்பிப்பதாகவும்அதன் பின்னரே ஏனைய போதைப்பொருள் பாவனைக்குஆளாகுவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறுபுகைப்பொருள் பாவனையைஆரம்பிக்கும் வயது 13 தொடக்கம் 18 எனஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே மேற்குறிப்பிட்டவியாபாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமைவெளிப்படையானஉண்மை.யாழ். மாவட்டத்தில் சிறுவர்கள் இலக்குவைக்கப்படும் போதைப்பொருள் பாவனையைகட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகள்,மதவழிபாட்டு இடங்கள்,மற்றும் வைத்தியசாலைகள் என்பவற்றில் இருந்து500 மீற்றருக்குஉட்பட்டபகுதிகளில் மதுபானநிலையங்கள்,புகைப்பொருள் விற்பனைமற்றும் போதைப்பொருள் விற்பனைகளை முற்றாக தடை செய்யுமாறு ஜனாதிபதிஅவர்களைவலியுறுத்திநல்லூர் உற்சவகாலத்தின் போது கையெழுத்து வைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பல்லாயிரக்காணக்கானோர் இதன்போதுகையெழுத்திட்டதுடன் தமதுஆதரவையும் தெரிவித்தனர்.

இவ்வாறுபெறப்பட்டகையெழுத்தை ஜனாதிபதியைநேரடியாகசந்தித்துவழங்குவதற்கானஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

குறித்த நிகழ்வை யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர்கள்,மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)ஆகியன இணைந்துமேற்கொண்டிருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்