கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கராட்டிபோட்டியில் அக்கரைப்பற்று திகோ/ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவன் கெளரவிப்பு…

அலுவலக செய்தியாளர்- காந்தன்

கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கிடையில் 2018.09.08 திகன உள்ளக விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற கராட்டி (காட்டா நிகழ்ச்சி) போட்டியில் அக்கரைப்பற்று திகோ/ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா) மாணவன் அக்கரைப்பற்று 8ம் பிரிவைச் சேந்த பற்றிக் பரராஜசிங்கம் சரோண் சச்சின் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான காட்டா நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினையும் சான்றிதழ் மற்றும் பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப் போட்டியில் பாடசாலைக்கு பெருமையை ஈட்டித்தந்த இம் மாணவனை நேற்றய தினம் பாடசாலையில்  அதிபர் மற்றும் பாடசாலை சமுகத்தினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்