இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு! – மாளிகாவத்தையில் பதற்றம்

கொழும்பு, மாளிகாவத்தையில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்குள் மாளிகாவத்தைப் பகுதியில் இடம்பெறும் மூன்றாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். இதனால், இரவு வேளைகளில் நடமாடுவதற்கு மாளிகாவத்தை மக்கள் அஞ்சுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்