புதுக்குடியிருப்பு – கைவேலி துப்பாக்கிசூடு- காயமடைந்த இளைஞன் பலி

புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு இலக்காகிய நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு – 4ஆம் வட்டாரம், கோம்பாவிலை சேர்ந்த திருச்செல்வம் கபிலன் என்பவரே அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது வாள்வெட்டை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த நால்வர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும், ஒருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பல்கலைக்கழக முன்னாள் மாணவனான கபிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்