அம்பாறை சிங்கள மக்கள் பிள்ளையார் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடு…

( தனுஜன் ஜெயராஜ் )

அம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம் தீர்த்தம் ஆகிய மகத்துவங்களோடு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ம்நாள் திருவிழா அம்பாறை மாவட்ட மக்களினால் நேற்றிரவு(12) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆலய மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பூசைகள் நடைபெற்று, கொடித்தம்பம் மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூசை ஆராதனைகளும் நடைபெற்றன.

பூசையினைத் தொடர்ந்து, சுவாமி, உள்வீதி, வெளிவீதி உலாவந்து, ஆலயத்திலிருந்து, அம்பாறை நகர்வரை ஊர்வலமாக சுவாமி எடுத்துசெல்லப்பட்டது. இதன்போது, தீபந்தம் சூழற்றல், இன்னியம், காவடியாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் போன்ற ஆட்டநிகழ்வுகளும் நடைபெற்றன.

இதில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன், சிங்கள மக்கள் நிறைகுடம் வைத்தும் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நீர் ஆகாரமும் வழங்கியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்