மைதானத்துக்கு தண்டப்புள்ளி வழங்க முடியாது

இங்கிலாந்தின் சமர்செட் விளையாட்டு மைதானத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற பிராந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, 4 இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 538 ஓட்டங்களே பெறப்பட்டன.

இதனை அடுத்து குறித்த மைதானம் தரம் குறைவானது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது

இது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கட் சபை பூரண விசாரணைகளை நடத்தியுள்ளது.

இதன்படி இந்த மைதானம் தரம் குறைவானது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில், மைதானத்துக்கு தண்டப்புள்ளி வழங்க முடியாது என்று அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்