படை பிரதானியை பாதுகாக்க முற்படுகிறார் ஜனாதிபதி-கூட்டமைப்பு விசனம்

குற்றப்புலனாய்வு பிரிவின் அழைப்பை மீறி பாதுகாப்பு படைகளின் பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பாக, கூட்டமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்துள்ளது.

ஜனாதிபதிக்கு தெரியாமல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டுக்கு பயணிக்க வாய்ப்பில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்து கொள்வதற்காக ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகாத பாதுகாப்பு பிரிவின் பிரதானி அன்றைய தினம் மெக்ஸிக்கோவுக்கு பயணித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதிக்கு அறிவிக்காது வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்