மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொன்ற கணவன் கைது

மண்வெட்டியால் தாக்குதல் நடத்தி மனைவியை கொலை செய்ததாக கணவனை கைது செய்துள்ளதாக கிராதுருகோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய திசாநாயக்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

கூலித் தொழில் செய்யக் கூடிய சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்