நூதனமுறையில் ஹெரோயின் விற்பனை- நால்வர் சிக்கினர்

கைத்தொலைபேசி ஊடாக பணப்பறிமாற்றம் செய்யும் முறையூடாக எம்பிலிப்பிட்டிய நகரில் ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நான்கு பேர் 125 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் காரில் சென்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் 20 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர 20 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 23 வயதுடைய பெண் ஒருவரும், 10 கிராமும் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 26 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டதாக எம்பிலிபிட்டய பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வட்டரெக, பனாமுர, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்