பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதற விட்ட ரோகித்-தவான்! அபார வெற்றியை பதிவு செய்த இந்தியா

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் படி நாணய் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்தணியின் துவக்க வீரர்களான இமாம் உல் ஹக்(2), பகார் சாமன்(0) என அடுத்தடுத்து புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இருப்பினும் பாப அசாம் மற்றும் மாலிக் ஜோடி சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கை சீரான விகிதத்தில் எகிறியது.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாபர் அசாம் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த அணியின் தலைவர் சர்ப்ரா அஹ்மத் 6 என வெளியேறினர்.

அணியின் அனுபவ வீரரான மாலிக் இன்னும் களத்தில் இருக்கிறார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்த போது, அவரை ராயுடு தன்னுடைய துல்லியமான ரன் அவுட் மூலம் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார்.

அடுத்து வந்த வீரர்களில் பகீம் அஷ்கர்ப் மட்டும் தாக்குபிடித்து 21 ஓட்டங்கள் எடுக்க, இறுதியாக பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 162 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கீதார் ஜாதவர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரோகித்-தவான் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் இந்திய அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது. ரசிகர்களுக்கு அதிரடி விருந்து அளித்த ரோகித் சர்மா தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஷிகார் தவான் 46 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இவர்கள் இருவரின் நிதானமான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.

இதனால், இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

ராயுடு 31 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 31 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அஷ்ரப் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ள இந்திய அணி இரண்டு வெற்றி பெற்றுள்ளது. ஹாங்காங்குடன் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, தற்போது இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்