சாவல்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கியது

(மன்னார் நிருபர்)

முருங்கன் P S C விளையாட்டுக் கழகத்தின் 60 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணிகள் பங்கு பற்றிய போட்டியின் இறுதிப் போட்டி நேற்று திங்கட்கிழமை(24) மாலை 3 மணியளவில் முருங்கன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் சாவல்கட்டு கில்லரி விளையாட்டுக் கழகம் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

இறுதிப் போட்டியில் இரு அணிகளும் கோல்கள் போடாத நிலையில் நேரம் முடிவுக்கு வந்தது.பின்னர் தண்ட உதை மூலம் வெற்றி,தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

இதில் கில்லரி அணி 2 கோல்களையும், ஐக்கிய விளையாட்டுக் கழகம் 1கோலையும் போட்டு, தெடரின் வெற்றி பெற்ற அணியாக சாவல்கட்டு கில்லரி அணி தெரிவு செய்யப்பட்டது.

வெற்றியீட்டிய அணிக்கு வெற்றி கேடயமும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெற்றி கேடயமும் பணப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்