2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்?

குரோசிய அணியின் தலைவரான லூகா மோட்ரிச் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை சுவீகரித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

இந் நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை தட்டிச் செல்ல போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்து அணியின் மொஹமட் சலா மற்றும் குரோஷியா அணியின் தலைவர் லூகா மோட்ரிச் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

இதில் 33 வயதான லுகா மோட்ரிச், ரொனால்டோ மற்றும் மொஹமட் சலாவை பின்னுக்குத் தள்ளி 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக மகுடம் சூடியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு அணித் தலைவர் மோட்ரிச் முக்கிய பங்காற்றியிருந்தார். உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியமையால் அவருக்கு தங்க கால்பந்து விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் ஆண்டின் சிறந்த மகளிருக்கான விருதினை பிரேஸில் அணியைச் சேர்ந்த மார்டோவுக்கும், சிறந்த பயிற்சியாளருக்கான விருதினை 2018 ஆம் ஆண்டின் பிபா கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்ஹாம்ப்ஸுக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்