Rise by lifting குறும்படத்தின் முதல் பார்வை…

தொடர்ந்தும் சாதித்து வரும் அன்னமலை மண்ணின் இளம் இயக்குனர் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் அடுத்த படைப்பான rise by lifting னுடைய முதல் பார்வை சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

உயர்த்துவதால் உயரும் என தமிழில் உபதலைப்பிடப்பட்ட இந்த குறும்படத்தில் இலங்கையின் பலவேறு இடங்களை சேர்ந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஔிப்பதிவினை ருவுதரனுடைய வழமையான ஔிப்பதிவாளர் ரேமினாத் அஜேயும் படத்தொகுப்பினை யாசீர் நிசார்தீனும் மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்படத்தில் மதுரன் சர்மா எனும் இளம் இயக்குனரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

எதிர்பாரப்பை உண்டு பண்ணியுள்ள இந்த படைப்பு வருகின்ற மாத உலக மனநல தினமன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்