கராத்தே போட்டியில் தேசிய ரீதியில் பதக்கம் வென்ற வவுனியா மாணவி!!

தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மாணவி வெள்ளிப்பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி மோக்சிதா மதிதரன் வயது (07) தேசிய ரீதியில் பண்டாரகமவில் 15-09-2018 அன்று நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

பயிற்றுவிப்பாளர் ஜெஸ்லி மார்சலின் வழிநடத்தலின் கீழ் வடமாகாண ரீதியில் சம்பியன் பட்டத்தை வென்ற மாணவி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்