மைத்திரி கொலைச் சதித்திட்டம்: பறிபோகின்றது கபிலவின் பதவி?

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்படக் கூடுமென அறியமுடிகின்றது.

மக்கள் வங்கியின் தலைவராகவும் ஜனாதிபதி அலுவலக பிரதானியாகவும் பதவி வகிக்கும் ஹேமசிறி பெர்னாண்டோ இந்தப் பொறுப்பை ஏற்பதற்காக ஜனாதிபதி அலுவலக பதவியை இராஜிநாமா செய்யக் கூடுமென சொல்லப்படுகின்றது..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கெதிரான கொலை சதி முயற்சிகள் குறித்து பாதுகாப்பமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை காரணமாக தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில மாற்றப்படவுள்ளார் எனத் தெரிகின்றது.

ஜனாதிபதி நாடு திரும்பிய கையோடு மாற்றங்கள் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்