கனடாவில் 28 ஆண்டுகளாக சொந்தமாக வீடுகளைப் வாங்குவதில் சிக்கல்நிலை!

கனடாவில் அனைவரும் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும், இயலும் தன்மையானது 28 ஆண்டுகள் காணாத மோசமான நிலையினைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய றோயல் வங்கியின் பொருளியல் வல்லுனர்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனேடியர் ஒருவர் தனக்கு சொந்தமாக வீடு ஒன்றினை வைத்திருப்பதற்கான இயலுமை, 1990ஆம் ஆண்டின் பின்னர் இந்த அளவுக்கு மோசமானதாக இருந்ததில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான இயலும் தன்மை துரதிஸ்டவசமாக நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும், நாட்டில் வட்டிவீதம் அதிகரித்துள்ளமை மற்றும் வீட்டு அடைமான வீதம் அதிகரித்துள்ளமை ஆகியனவே இதற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வன்கூவர், ரொறென்ரோ, விக்டோரியா மார்க்கெட்ஸ் ஆகிய இடங்களிலேயே இவ்வாறு வீடுகளை பெற்றுக்கொள்ளும் இயலுமை கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்