கனேடிய கடலில் வலம்வரும் அபாயகரமான திமிங்கிலம்!

கனேடிய கடலில் பல தசாப்தங்களாக காணப்படாத அபாயகரமான திமிங்கிலத்தை ஆராய்ச்சியாளர்கள்;, கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடல் பகுதியிலேயே குறித்த திமிங்கிலத்தை அவதானித்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய திமிங்கில வகைகளில் மூன்றாவதாக உள்ள ‘செய் திமிங்கில’ இனமே இதுவென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 1940இற்கு முன்னரான காலப்பகுதியில், குறித்த திமிங்கிலம் இந்த கடற்பகுதியில் இருந்ததாகவும், தற்போது பல தசாப்தங்களுக்கு பிறகு கனேடிய கடலில் இத்திமிங்கலம் தென்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமெனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மிக அரிதான திமிங்கில வகையான இது, உலகின் மிக வேகமான பாலூட்டிகளில் ஒன்றாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்